அ) TNPSC ( DSP, Dep Collector .etc) போன்ற தமிழ்நாடு அரசு பணிக்கான குருப் 1 தேர்வை, பொது பிரிவிற்க்கு 30வயது வரையும், முஸ்லிம்கள் 35 வயது வரையும் எழுத முடியும். எனவே முப்பதை தாண்டியவர்கள் கவலை பட தேவையில்லை.
ஆ) UPSC ( IAS, IPS, IFS etc. ) தேர்வை பொது பிரிவிற்க்கு 30வயதுவரையும், OBC (Backward) 33 வயது வரையும் தேர்வு எழுத முடியும். (இந்திய அளவில் முஸ்லிம்கள் OBC யில் வருவார்களா என்று தெரியவில்லை).
இ) UPSC தேர்வில் முதல் 100 இடங்களில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கே கலெக்டர் உள்ளிட்ட கேட்ட பதவிகள் கிடைக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சரியான திட்டமிடல் இருந்தால் தான் (UPSC exam ) Preliminary தேர்வை வெற்றி பெற முடியும். அதற்கு பிறகு மெயின் தேர்வு, நேர்கானல் என்று பல கட்டங்களையும் தாண்ட முடியும். தற்போது தமிழ் மொழியிலும் தேர்வுகளை எழுத முடியும். ஆனால் நம் தமிழ் மொழியில் பயற்சிக்கு உரிய படங்கள் அதிகமாக இல்லை என்பது மிகப்பெரும் குறை. ஒரு சிலர் தமிழ் மொழியில் எழுதியும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் எண்ணிக்கை மிக குறைவு. நம் மாணவர்களை தயார் படுத்தும் அதே வேலை சமுதாய ஆசிரியர்களும் இதை பற்றி அறிந்திருப்பது அவசியம். மாணவர்களோடு அதிகமாக தொடர்பில் இருப்பவர்கள் அவர்கள் அல்லவா?. எனவே அதற்காண முயற்ச்சியிலும் நாம் ஈடுபடுவோம்.
V A O போன்ற பணி குறைந்த பட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு. 10, 12 வகுப்பு மட்டும் படித்தவர்கள் குறைந்தது இந்த கடைநிலை பதவிக்காவது முயற்சி செய்யலாம்.
IIT (B.TECH, M.TECH)
மத்திய அரசு சார்ந்த ஐ.ஐ.டி (Indian Institute of Technology) போன்ற உயர் கல்வி அனைத்திலும் - இதுபோல் நம் பிள்ளைகளை தயர்படுத்த வேண்டும்.
உதாரணமாக I.I.T (JEE-Joint Entrance Exam), தேர்வுக்கு ஆந்திரா போன்ற மாநிலங்களில் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் போதே தயர்படுத்துகின்றார்கள். அதனால் தான் தென் இந்தியா அளவில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்களே I.I.T யில் அதிகம் படிக்கின்றார். (http://timesofindia.indiatimes.com/india/Andhra-bags-7-of-top-10-IIT-ranks/articleshow/5978951.cms)
எனக்கு தெரிந்து இஞ்சினியார் படிக்கும் நம் சமுதாய மாணவர்களுக்கு கூட, அவர்கள் சார்ந்த ஐ ஐ டி (I.I.T) பற்றி போதுமான அறிவு இல்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
எனக்கு தெரிந்து இஞ்சினியார் படிக்கும் நம் சமுதாய மாணவர்களுக்கு கூட, அவர்கள் சார்ந்த ஐ ஐ டி (I.I.T) பற்றி போதுமான அறிவு இல்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
IIM ( MBA )
அதுபோலவே B.Com, BBA படிக்கும் மாணவர்களும் உயர் படிப்பான M.B.A வழங்கும் உலக அளவில் புகழ் பெற்ற I.I.M (Indian Institute of Management) பற்றி அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள.
இந்திய அளவில் புகழ் பெற்ற BIM (Bharathidasan Institute of Management) என்று பாரதிதாசன் யுனிவர்சிட்டி சார்பு கல்வி நிறுவனத்தை பற்றியும் அறியவில்லை. இங்கு படித்தவர்களுக்கு 100 சதவித வேலை உண்டு சம்பளம் குறைந்தது மாதம் லட்சத்திற்கு மேல்!. இந்தியாவிலேயே, மிகப்பெரிய நிறுவனங்களில் பலவற்றில் IIM, BIM படித்தவர்கள் பல நல்ல பதவிகளில் உள்ளார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் நம் Khadir Mohideen College பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் தான் இருக்கின்றது. நம் கல்லுரியில் படித்த எத்தனை பேருக்கு BIM பற்றி தெரியும் என்று தெரியவில்லை!. கல்வி விழிப்புனர்வில் நம் பயணம் நீண்டது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மிக நீண்ட பயணம் செல்லவேண்டியுள்ளது. நம் பிள்ளைகளுக்கு, சிறுவயது முதல் இதில் ஆர்வமூட்ட வேண்டும். நம் விழிப்புனர்வு பிரச்சாரத்தை பள்ளிபடிப்பு ( 8 to 12 Std) மாணவர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நீண்ட கால திட்டம் தான் பயன் அளிக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன்
இந்த உயர்கல்வி ( Civil Service, I.I.T, I.I.M, BIM ) அவசியத்தை மணவர்களிடம் சேர்ப்பதற்கு, நம் சமுதாய ஆசிரியரின் ஒத்துழைப்பும், பெற்றோர்களிடம் ஒத்துழைப்பும் அவசியம். அவர்களுக்கு தெரிந்த வழியில், தெரிந்த மொழியில் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.
சகோதரர் மீரா அவர்களுக்கு அதிரை முஜீப்.காம். இணையத்தின் சார்பாக நன்றி!.
You Might Also Like :





0 கருத்துகள்:
கருத்துரையிடுக