செவ்வாய், 1 மார்ச், 2011

குழு விவாதத்தில் ஜொலிக்க செய்ய வேண்டியவை


8:41 PM |

 அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்றைய போட்டி நிறைந்த உலகில், திறமையான நபர்களை தேர்வுசெய்யவே நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன் காரணமாக நிறுவனங்கள் வேலை நியமனம் செய்யும்போது பல்வேறு விதமான தேர்வு முறைகளை நடத்துகின்றன. அதில் "குரூப் டிஸ்கஷன்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குழுவிவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

* தினசரி செய்தித்தாள்களை படிப்பதை வழக்கமாக வேண்டும்
* அறிவுசார் புத்தகங்கள், வார மற்றும் மாத இதழ்களை படிக்கலாம்.
* நண்பர்களுடன் தினமும் ஒரு தலைப்பில் பேசி பழகலாம்.
அன்றாட நிகழ்வுகள் குறித்த உங்களது கருத்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுகுறித்த கருத்துகளை அவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ள முற்பட வேண்டும்.
*  கண்ணாடி முன்பு நின்று பேசி பழகலாம். அப்போது உங்கள் உடல் அசைவுகளை ("பாடி லாங்வேஜ்') சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* தன்னம்பிக்கையுடன் பேச கற்றுக்கொள்ளுங்கள்.
* விரைவாக சிந்தித்து சரியான வாதத்தை எடுத்துரைக்க வேண்டும்.
* உங்களது தலைமைப்பண்பை பேச்சில் வெளிப்படுத்த வேண்டும்.
* மற்றவர்களும் பேச போதிய வாய்ப்பு வழங்க வேண்டும்.
* தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதை தவிர்க்க வேண்டும்.
* உங்களது வாதம் சுருக்கமாகவும், தெளிவாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும்.
* இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலப்புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
* மற்றவர்கள் பேசுவதையும் நன்கு கவனிக்க வேண்டும். அதன்மூலமாக புதிய கருத்துக்களை நீங்கள் எடுத்துரைக்க முடியும்.


You Might Also Like :


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...