சனி, 15 ஜனவரி, 2011

முஸ்லிம் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி


8:40 PM |



அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலுள்ள அறிவியல் மேம்பாட்டு மையம், இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக இரண்டுவிதமான அறிவியல் பாடத்திட்டங்களை நடத்த உள்ளார்கள்.

முதல் பாடத்திட்டமானது "கற்பித்தலில் கணினி பயன்பாடு" என்பது பற்றியது. இரண்டாவது பாடத்திட்டமானது, "அறிவியல் பாட அறிமுகம்" என்பதாகும். இந்த வகுப்புகள் வரும் பிப்ரவரி 14 முதல் 23 ம் தேதி வரை நடைபெறும். மேலும் இந்த வகுப்புகள் &'அறிவியல் கல்வி தர மேம்பாட்டு திட்டங்கள் 2010-2011&' என்பதன் கீழ் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து அலிகார் முஸ்லீம் பல்கலையின் அறிவியல் மேம்பாட்டு மைய இயக்குனர் டாக்டர். ஹிசாமுதீன் கூறுகையில், "இந்த பயிற்சி வகுப்புகளுக்கான பங்கேற்பாளர் தேர்வானது, அகில இந்திய அளவில் நடத்தப்படும். மேலும் பங்கேற்பவர்களுக்கு தங்குமிட வசதி, பயண செலவுகள் உள்பட கணிசமான அளவு செலவினத் தொகையும் வழங்கப்படும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அறிவியல் கல்வியை அதிகளவில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடனேயே எங்கள் பல்கலையில் அறிவியல் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டது. தீனி மதரிஸ் உள்ளிட்ட முஸ்லிம்கள் நிர்வகிக்கும் கல்வி நிறுவனங்களில் அறிவியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்று" என்று கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் சென்றுசேர வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 5 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You Might Also Like :


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...