செவ்வாய், 28 டிசம்பர், 2010

தேர்வில் குறைந்த மதிப்பெண்களா? வெற்றிக்கு வழிகாட்டி


12:59 AM |

தேர்வு பயம் தேவையற்றது
பொதுத் தேர்வை எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்கள் பெரும்பாலும் தேவையற்ற பதற்றத்தினாலேயே தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவது, தேர்ச்சி பெறாமல் போவது போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சில மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து முன்னரே கவலைப்பட துவங்கிவிடுவது தேர்வு நேரத்தில் தேவையற்ற பயத்தை உண்டாக்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். சிறப்பாக தேர்வை எப்படி எழுதுவது என்பதை பற்றி மட்டுமே மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.

எதிர்மறையான எந்த சிந்தனைகளுக்கும் மாணவர்கள் மனதில் இடம் அளிக்கக்கூடாது என ஆலோசனை கூறுகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் அடித்துப்பிடித்து படித்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையை அறவே தவிர்ப்பது நல்லது என்கின்றனர் அவர்கள். சக மாணவர்களுடன் தங்களை ஒப்பிடுவதை தவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அவரவருக்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு படிக்க வேண்டும்.

பாடங்களை புரிந்து படிப்பது தேர்வு நேரத்தில் படித்தவை மறக்காமல் நினைவில் நிற்க உதவும். முக்கியமாக வகுப்பு ஆசிரியர்கள் கூறும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றினாலே எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும் என்கின்றனர் அவர்கள்.

நம்பர் ஒன் ஸ்டூடன்ட்

* மாணவர்கள் புத்தக புழுவாக இல்லாமல் பல்வேறு அறிவுசார் விஷயங்களை தெரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

* வெறும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கைக்கு உதவாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

* இன்றைய போட்டிநிறைந்த உலகில் பேச்சுதிறன், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், போன்ற கூடுதல் திறமைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும்.

* எதிர்கால லட்சியத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இலக்கை அடைய எந்தவித சுணக்கமின்றி செயல்படுவதோடு தொடர்ந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

* நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதோடு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை கேட்டு நடப்பது
லட்சியத்தில் வெற்றி காண உதவும்.

* பாடப்புத்தகங்கள் தவிர்த்து இதர அறிவுசார் புத்தகங்களை படிப்பது பன்முக சிந்தனையை வளர்த்துக்கொள்ள உதவும்.

* எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டுநலனுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ள...

* குறைந்த நேரத்தில் அதிக வினாக்களுக்கு பதிலளிக்க பயிற்சி எடுப்பது அவசியம்.

* உங்களுக்கு எளிதாக இருக்கும் பிரிவினை முதலில் தேர்ந்தெடுத்து பதிலளிப்பது உங்களின் தன்னம்பிக்கையை கூட்டும்.

* ஒவ்வொரு வினாவுக்கும் குறிப்பிட்ட கால அளவுக்குள் பதிலளிக்க வேண்டும். கூடுதல் நேரம் பிடிக்கும் என்று தெரியும் வினாக்களை விட்டுவிட்டு மற்ற வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். கடைசியாக நேரம் இருந்தால் அந்த வினாக்களுக்கு பதில் அளிக்கலாம் ஏனெனில் போட்டித் தேர்வுகளை பொறுத்த அளவில் நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

* பொதுவாக போட்டித் தேர்வுகளில் கேள்விகள் பல்வேறு பாடப்பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். எனவே நீங்கள் பதில் அளிக்கையில் சராசரியாக அனைத்து பிரிவுளிலும் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பது நல்லது.

* தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கும் முறையிலான நெகடிவ் வகை தேர்வுகளில் அதிக வினாக்களுக்கு பதில் அளிப்பதை விட மிகச்சரியாக பதில் தெரிந்த வினாக்களுக்கு மட்டும் பதில் அளிப்பது புத்திசாலித்தனம்.

* கடைசியாக விடைகளை சரிபார்க்க குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். பெரும்பாலானவர்கள் இதை செய்ய
தவறுகின்றனர்.


You Might Also Like :


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...